பள்ளத்தில் பைக் கவிழ்ந்து ஒருவர் பலி
கோவை:
குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததில் ஒருவர் இறந்தார்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள மாதையன் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி (46). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராகஇருந்து வந்தார். இவர் தனது நண்பருடன் இரவில் பைக் ஒன்றில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது தபால் நிலையம் அருகே குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்படிருந்த குழி சரியாக மூடப்படாமல்இருந்துள்ளது. இந்தக் குழி பைக்கின் விளக்கு வெளிச்சத்தில் சரியாகத் தெரியாததால், பைக் அந்த பள்ளத்தில்கவிழ்ந்தது.
இதில், நண்பருடன் அமர்ந்திருந்த சுப்ரமணி, குடிநீர் குழாயில் மோதினார். தலையில் பலத்த காயமடைந்த அவர்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!