மாடு மேய்க்கும் மாணவனின் லாஜிக் சாதனை
மதுரை:
மதுரை தியாகராஜர் நன்முறை பள்ளியில் படித்த அழகு சுந்தரம் என்ற மாணவர் ப்ளஸ்2 தேர்வில் லாஜிக் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இப்பாடத்தில்அவர் 200க்கு 192 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இருக்கும் கழுகர் கடை கிராமத்தைச்சேர்ந்த இவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தன்னுடைய சாதனையைக் கேள்விப் பட்டபோதுகூட அவர் மாடு மேய்த்துக்கொண்டுதான் இருந்தார்.
தனது சாதனை குறித்து கூறுகையில், நான் லாஜிக் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என நினைத்தேன் மாநில அளவில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளதுஎனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
எனக்கு காலையில் மட்டும்தான் படிக்க நேரம் கிடைக்கும். மாலையிலும், விடுமுறைநாட்களிலும் மாடு மேய்ப்பது என் வழக்கம்.
எனக்கு படிக்க வசதி இல்லாததால் என் தந்தை என்னை ராணுவத்தில் சேர சொன்னார்.நானும் ராணுவ தேர்வுக்கு சென்று ஓட்ட தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால் எடைகுறைவாக இருந்ததால் தேர்வு பெறவில்லை.
எங்களிடம் 30கிடை மாடுகளும், வானம் பார்த்த பூமியும்தான் உள்ளன. சட்டம் படித்துசர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என விரும்கிறேன். நான் தொடர்ந்துபடிக்க வேண்டுமானால் அதிக செலவாகும். அதற்கு வசதியில்லை.
படிப்பதற்கு உதவி கிடைத்தால் தொடர்ந்து படிப்பேன். தியாராஜர் நன்முறைமேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மணலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஆகியோர் செய்த உதவியை நான் மறக்க முடியாது என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!