வீரப்பனை பிடிக்க தேவாரம் நியமனம்
சென்னை:
சந்தன மரக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படையின் தலைவராக தமிழகத்தின்முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராக அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
பலர் எந்த பதவியும் அளிக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன் தமிழக சட்டசபையின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஜானகிராமன், மீண்டும் ஒப்பந்தஅடிப்படையில் சட்டசபையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது அவருக்காகவேஏற்படுத்தப்பட்ட பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா பதவியேற்றதும் சந்தன மரக் கடத்தல் வீரப்பனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனகூறியிருந்தார். இது ஆளுனர் உரையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்டிருக்கும் அதிரடிப்படைக்கு சிறப்பு தலைவராக யாரைநியமிக்கலாம் என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை தமிழக டி.ஜி.பி.ராஜகோபாலனுடன்ஆலோசனை நடத்தினர்.
அந்த ஆலோசனையின் முடிவில் முன்னாள் தமிழக டி.ஜி.பி. தேவாரத்தை அதிரடிப்படையின் சிறப்பு தலைவராக 5ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. தேவாரத்திடமிருந்தும் இதற்குஒப்புதல் பெறப்பட்டுவிட்டது.
தேவாரம் முன்பு வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படையின் தலைவராகசெயல்பட்டு வந்தார். அப்போது வீரப்பனின் ஆள் பலத்தை குறைத்து, வீரப்பனின் நடமாட்டத்தை ஒடுக்கியவர்இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதவியும் தேவாரத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!