3 சாட்டிலைட்களுடன் விண்ணில் பாயப்போகும் இந்திய ராக்கெட்
நாகர்கோவில்:
வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணில் பாயவிருக்கிறது பி.எஸ்.எல்.வி.-சி3 ராக்கெட்.
இந்த ராக்கெட்டின் மூலம் ஒரே நேரத்தில் 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் மூலம் 2,000 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திசாதனை படைத்தது இஸ்ரோ. இதன் அடுத்த கட்டமாக, கிரையோஜனிக் இஞ்சின்களையும் உள் நாட்டிலேயே தயாரித்து சோதனைசெய்வதில் இஸ்ரோ வெகு தீவிரமாக இருக்கிறது.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வியின் அடுத்த ரக ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி.-சி3, வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள்விண்ணில் ஏவப்படுவதற்குத் தயாராகி வருகிறது. இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ராக்கெட்டின் 2வது மற்றும் 4வது கட்டங்களை ஒருங்கிணைக்கும் பணி மகேந்திரகிரி ராக்கெட் தளத்தில் நடைபெற்றுவருகிறது. 1வது மற்றும் 3வது கட்டங்களைத் தயாரிக்கும் பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்து வருகின்றன. ஆகஸ்டுமாதத்திற்குள் 4 கட்டங்களையும் ஒருங்கிணைக்கும் பணி நிறைவு பெறும்.
அதற்குப் பின்னர், 950 கிலோ எடையுள்ள "டெஸ்ட் சாட்" என்ற இந்தியத் தொலையுணர்வு செயற்கைக் கோள், இந்த ராக்கெட்டில்பொருத்தப்பட்டு, விண்ணில் செலுத்தப்படும்.
இந்திய செயற்கைக் கோள் தவிர, 105 கிலோ எடை கொண்ட பெல்ஜியம் நாட்டின் செயற்கைக்கோளையும், 48 கிலோ எடைகொண்ட ஜெர்மனியின் செயற்கைக் கோள்களையும் பி.எஸ்.எல்.வி.-சி3 ராக்கெட் விண்ணில் செலுத்தவிருக்கிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications