பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய அமைதி புறா
டெல்லி:
இந்திய பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் சந்தித்துப் பேசவுள்ள நிலையில், பாகிஸ்தான் சிறையில்அடைக்கப்பட்டுள்ள இந்திய அமைதித் தூதரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அவரது பெற்றோர்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் விகாஸ் சிங். உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த விரும்பிய இவர், சுமார்14 ஆண்டுகளாக 62 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் நாட்டு மக்களிடமும் அமைதியின்முக்கியத்துவத்தை எடுத்துக் கூற விரும்பிய இவர் அங்கு நுழைந்த போது, அவரிடம் விசா, பாஸ்போர்ட்டுகள் ஆகியதஸ்தாவேஜூகள் இல்லாத காரணத்தால் அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் ஹைகோர்ட் கடந்த மே 31 ம் தேதி அவருக்கு சிறைத்தண்டனை விதித்தது. தற்போது அவர் பெஷாவர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை மீட்கும் முயற்சியில் இவருடைய பெற்றோர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டுத் தலைவர்களுக்கும் பல கடிதங்கள் எழுதி தனது மகனை விடுதலை செய்ய முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியத் தலைவர்ளிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை இவர்களுக்குக் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சிறையில் இருக்கும் விகாசின் தந்தை சுரேந்திர சிங் கூறுகையில்,அமைதியை ஏற்படுத்த உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட என் மகனை விடுவிக்க நாங்கள் செய்யும் முயற்சிகள்அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.
பாகிஸ்தான் அதிகாரிகள் நான் போடும் கடிதங்களுக்கு பதில் கூற மாட்டார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் இந்தியஅதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் எனது கடிதங்களுக்கு இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை என்பதுதான் என்னை மிகவும்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் விஜய் நம்பியார், பாகிஸ்தான்அதிபர் முஷாரப், இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் ஜஹாங்கிர் க்வாஸி ஆகியோருக்கு என் மகனை விடுவிக்கக் கோரிகடிதங்கள் எழுதியுள்ளேன். ஆனால் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்றார்.
இந்நிலையில் விகாசின் தாய் வித்யா சிங், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் மனைவி ஷேபாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.ஏனெனில் ஷேபா உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தவர்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறுகையில், என் மகனை உங்கள் மகனாக நினைத்து அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்.
அமைதி ஏற்படுத்துவதற்காக சுற்றுப்பயணம் செய்த என் மகனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். வயதான ஒரு தாய்தனது மகனை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு இருப்பது மிகவும் வேதனைக்குரியது எனக்குறிப்பிட்டுளார்.
பாகிஸ்தான் அதிபர் முஷாரப் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். அப்போது முஷாரப்பும், வாஜ்பாயும் தன் மகனை விடுதலைசெய்ய உத்தரவு பிறப்பிப்பார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் இந்த அப்பாவிப் பெற்றோர்.
உலகம் முழுவதும் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வங்கதேசத்தில் தனது அமைதிச் சுற்றுப்பயணத்தைத்தொடங்கிய சிங் 1987 ம் ஆண்டு முதல் தனது பெற்றோரைப் பார்க்கவில்லை. உலகம் முழுவதும் அமைதி பிரச்சாரத்தில்ஈடுபட்டுவிட்டு 25 ஆண்டுகளில் வீடு திரும்பி விடுவதாகக் கூறிச் சென்றார் சிங்.
பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு முன் சிங், தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், இங்கு சூழ்நிலை சரியில்லாத காரணத்தால்என்னால் தொலைபேசி மூலம் உங்களைத் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. வெகு விரைவில் பாகிஸ்தான்செல்லவிருக்கிறேன் என்றார். ஆனால் பாகிஸ்தான் சென்றவுடன் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!