அமர்நாத் யாத்திரை இன்று துவங்கியது
ஸ்ரீ நகர்:
ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை திங்கள்கிழமை துவங்கியது.
அமர்நாத் குகைக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரவண பூர்ணிமா (பவுர்ணமி )தினத்தின் போது, அங்கு கோவில்கொண்டுள்ள சிவ பெருமானை தரிசித்து வழிபடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.
இதற்காக ஆண்டு தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் குகைக் கோவிலுக்கு வருவது வழக்கம்.
இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை திங்கள்கிழமை காலை துவங்கியது. சந்நியாசிகள் உட்பட 4,000 பக்தர்கள் நுவாமில்அமைக்கப்பட்டிருந்த முகாமிலிருந்து 150 வாகனங்கள் மூலம் அமர்நாத் யாத்திரையைத் துவக்கினர். ஸ்ரவண பூர்ணிமா ஆகஸ்டுமாதம் 4ம் தேதி நிகழ்கிறது.
1.5 லட்சத்திற்கும் அதிகாமான யாத்ரிகர்கள் இந்த ஆண்டு யாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவ வீரர்கள், போலீஸ். மத்திய ரிசர்வ் போலீஸ். இந்திய -திபெத் எல்லை பாசதுகாப்பு படையினர் அமர்நாத் குகைகோவிலுக்கு செல்லும் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
யாத்ரிகர்களுக்கு தேவைப்படும் மருந்து, ஆக்சிஜன், உணவு பொருட்களும் பக்தர்களுக்குத் தேவையான அளவு கையிருப்பில்வைக்கப்பட்டுள்ளன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!