• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன்று சேர்ந்த கருணாநிதி குடும்பத்தினர்

By Staff
|

சென்னை:

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

கருணாநிதி மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊழல் குற்றச் சாட்டுக்கள் உண்மையோ இல்லையோ, தெரியாது.ஆனால், கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம், "கன்னா பின்னா"வென்று பிரிந்து கிடந்த அவருடைய குடும்பஉறுப்பினர்களை ஒன்றாகச் சேர்த்துள்ளது என்பது மட்டும் உண்மை.

கருணாநிதிக்கு 2 மனைவிகள். வழக்கமாக கோபாலபுரத்தில் உள்ள முதல் மனைவியான தயாளு அம்மாள் வீட்டில்கருணாநிதி இருப்பார். பகல் சாப்பாட்டுக்கு மட்டும் ஆலிவர் ரோட்டில் உள்ள ராஜாத்தி அம்மாளின் வீட்டுக்குச்செல்வார். சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு இரவில் வழக்கமாக கோபாலபுரம் வந்துவிடுவார்.

2வது மனைவியான ராஜாத்தியம்மாள் வசித்து வரும் ஆலிவர் ரோட்டில் உள்ள வீட்டில்தான் கருணாநிதி கைதுசெய்யப்பட்டார். ஆனாலும், கருணாநிதி முதல்வராக இருக்கும் போது, தயாளு அம்மாள்தான் "முதல்பெண்மணி"யாகக் கருதப்பட்டார்.

கருணாநிதி-தயாளு அம்மாளுக்குப் பிறந்தவர்கள்தான் முத்து, அழகிரி, ஸ்டாலின், தமிழரசு மற்றும் செல்வி.அதேபோல், கருணாநிதி-ராஜாத்தியம்மாளுக்கு ஒரே ஒரு வாரிசுதான். அவர்தான் கனிமொழி. சிறந்த கவிஞராகத்திகழும் கனிமொழியின் கணவரும் ஒரு நல்ல கவிஞர்தான். இவருக்குச் சொந்த ஊர் சிங்கப்பூர். ஜெயிலுக்குஉள்ளே அவர் செல்லும் வரை, அவருடன் கண்ணீரும் கம்பலையுமாக வந்தவர்தான் கனிமொழி.

சண்டை ஏதும் போட்டுக் கொள்ளாத போதும், 2 குடும்பங்களும் எதிரெதிர் துருவங்களாகத்தான் இருந்துவருகிறார்கள். கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடந்த சட்டசபைக் கூட்டங்களில், அவருடைய உரையைநேரில் காண்பதற்கு 2 குடும்பத்தினரும் வருவார்கள். ஆனாலும், அந்தக் குடும்பம் ஒரு பக்கத்திலும், இந்தக்குடும்பம் மறு பக்கத்திலும்தான் உட்கார்ந்திருக்கும்.

ஆனால், தற்போதைய கருணாநிதி கைது சம்பவம் 2 குடும்பங்களையுமே உலுக்கி எடுத்துள்ளது.

நீண்ட நாட்களாகவே கருணாநிதி, ஸ்டாலினுடன் சண்டை காரணமாக வீட்டுக்கு வராமல் ஒதுங்கி இருந்த அழகிரி,தற்போது தன் சகோதரர் ஸ்டாலினை மதுரைச் சிறையில் சந்தித்ததோடு நில்லாமல், சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டிருக்கும் தன் தந்தை கருணாநிதியையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். கருணாநிதியை விடுதலைசெய்யாவிட்டால், ஜெயலலிதா அரசைச் சும்மா விடமாட்டேன் என்று சூளுரையும் விடுத்துள்ளார்.

அழகிரியின் மறு விஜயம், தயாளு அம்மாள் குடும்பத்தில் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.இன்னொரு மகனான மு.க. முத்து மட்டும் இன்னும் ஒதுங்கியே இருக்கிறார். எம்.ஜி.ஆரின் தீவிர அனுதாபியானஇவருக்கு, ஜெயலலிதா முன்பு முதல்வராக இருந்தபோது பெரும் தொகை கொடுத்தார். இப்போது அழகிரிதான்இவருக்கு நிதி உதவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த 2 குடும்பங்களைத் தவிர வேறு ஒரு முக்கியமான குடும்பமும், கருணாநிதியின் ரத்த சம்பந்தப்பட்டது. மத்தியஅமைச்சர் முரசொலி மாறனின் குடும்பம்தான் அது. கருணாநிதியின் அக்காள் மகன் மட்டுமல்ல, அவருடையவலக்கரமே மாறன்தான். நீண்ட காலமாக, கருணாநிதியின் தோளோடு தோள் நின்று கொண்டிருக்கிறார் மாறன்.

மாறனின் மகன் கலாநிதி மாறன்தான் சன் டி.வி.யின் அதிபதி.

3 குடும்பங்களில் உள்ள அனைவருமே ஒன்று கூடி, கருணாநிதியின் விடுதலைக்காகப் போராடினர். ஒரு வழியாகபுதன்கிழமை மாலை கருணாநிதி விடுதலையாகி வெளியே வந்துவிட்டார்.

ஐ.ஏ.என்.எஸ்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X