இன்று சந்திர கிரகணம்
இந்த ஆண்டின் (2001) முதல் சந்திர கிரகணம் ( 05.07.2001) வியாழக்கிழமை நிகழ்கிறது.
இந்த ஆண்டு 2 சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் நிகழ்கின்றன. முதல் சூரிய கிரகணம் சென்ற மாதம் (21.06.2001) நிகழ்ந்தது. இதுஇந்தியாவில் தெரியவில்லை.
அடுத்த சூரியகிரகணம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி (14.12.2001) நிகழ உள்ளது. இதுவும் இந்தியாவில் தெரியாது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. இது இந்தியாவில் தெரியும்.
இரண்டாவது சந்திர கிரகணம் இந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 30ம் தேதி (30.12.2001) நிகழ உள்ளது. இதுவும் இந்தியாவில் தெரியாது.
பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதுதான் சந்திர கிரகணம் என கூறப்படுகிறது. சந்திர கிரகணம் பவுர்ணமியின் போதுதான் நிகழும். சூரிய கிரகணம்அமாவாசையின் போது நிகழும்.
இந்த சந்திர கிரகணம் நிகழும் நேரம்: (நேரங்கள் இந்திய நேரப்படி)
ஸ்பர்சம்: மாலை 5.40 மணி
ஆரம்பம்: இரவு 7.04 மணி
மத்திமம்: இரவு 8.24 மணி
முடிவு : இரவு 9.45 மணி
மோட்சம்: இரவு 11.09 மணி
இதில் ஸ்பர்சம் என்பது ஆரம்ப நிலைக்கும் முற்பட்ட நிலை அந்த நேரம் முதலே சந்திரனின் ஒளி குறைய ஆரம்பித்துவிடும்.
முழுவதுமாக பூமியின் நிழல் சந்திரன் மீது விழ ஆரம்பிக்கும் நேரம் இரவு 7.04 மணிக்குத்தான்.
மத்திம் என்பது சந்திர கிரகணத்தின் நடு பகுதி.
சந்திர கிரகணம் இரவு 9.45 மணிக்கு முடிவடைகிறது.இப்போது பூமி சந்திரனின் பாதையிலிருந்து விலகி விடுவதால். பூமியின் நிழல் சந்திரனின் மீதிலிருந்துபூரணமாக விலகிவிடும்.
மோட்சம் இரவு 11.09 மணி. அதாவது மீண்டும் சந்திரன் ஒளி பெற ஆரம்பிக்கும் நேரமாகும்.
இந்த கிரகணம் மூலம், பூராடம், உத்திராடம், பரணி, பூசம் ஆகிய நட்சத்திரங்களில் பிடிப்பதால் இவர்கள் வியாழக்கிழமை காலையோ, கிரகணம்பிடிக்கரும் முன்போ கோவில்களில் அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யலாம்.
இயலாதவர்கள் வீட்டில் பூஜை செய்தால் கூட போதுமானது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!