• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்திரிகா அழைப்பு: தமிழர் கட்சிகள் புறக்கணிப்பு

By Staff
|

கொழும்பு:

இலங்கையில் அதிபர் சந்திரிகா அழைப்பு விடுத்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனைத்து தமிழர்கட்சிகளும் மறுத்துள்ளன.

ஆனால் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியூஎல்எப்) மட்டும் தனது கட்சிக் கமிட்டியுடன் கலந்தாலோசித்துமுடிவு செய்வதாக அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் சந்திரிகா பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக இலங்கைபாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பிரச்சனை செய்து வருகின்றன.

மேலும் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் கொண்டு வந்தனர். எனவே பாராளுமன்றத்தைக் கூட்டிநம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும்சபாநாயகரிடம் கோரி வந்தனர்.

ஆனால், சந்திரிகா பதவி விலக மறுத்ததுடன் பாராளுமன்றத்தையும் ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்தார். மேலும்தன் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்போவதாக சந்திரிகா அறிவித்தார். அதையும் மீறி எதிர்கட்சியினர் பாராளுமன்றத்திற்குள் புகுந்து ரகளை செய்தனர்.

மேலும் இந்த மாதிரி காரணங்களுக்காக பொது மக்களிடம் வாக்கெடுக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை என்றுஎதிர்கட்சிகள் கூறிவந்தன. இதைத் தொடர்ந்து அங்கு பெரும் குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 21-ந் தேதி தாம் நடத்தவுள்ள பொதுமக்கள் வாக்கெடுப்பு குறித்து விவாதிக்கஅனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் எந்த ஒரு தமிழர் கட்சியும் இதில் கலந்துகொள்ளமாட்டோம் என்று அறிவித்து விட்டன.

ஆனால் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னனி என்ற கட்சி மட்டும் கட்சிக் கமிட்டியுடன் கலந்தாலோசித்து முடிவுசெய்யப்போவதாக மாவை சேனாதிராஜா என்ற எம்.பி. அறிவித்துள்ளார்.

இது குறித்து யு.பி.எப். கட்சியின் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், இவ்வாறு ஒவ்வொரு கட்சியையும்தனித்தனியாக சந்திக்க விரும்புவது, அந்தக் கட்சியினரை விலைக்கு வாங்க எடுக்கும் முயற்சி. மேலும் இதுபோன்றவிவாதத்திற்காகத்தான் பாராளுமன்றம் இருக்கிறதே என்றார்.

டெலோ மற்றும் ஏசிடிசி இயக்கத்தினர் கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தி அவர்களும்ஒத்துக்கொள்ளும் வகையில் சட்டத்தை உருவாக்குவதே பலங்காலமாக நடந்து வரும் போருக்கு முற்றுப்புள்ளிவைக்கும் என்றனர்.

இதற்கிடையில் ஏ.சி.டி.சி. இயக்கத்தின் தலைவரும் எம்பியுமான வினாயகமூர்த்தி அதிபருக்கு எழுதியுள்ளகடிதத்தில், பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டு சட்டத்திருத்தம் கொண்டு வரமுயல்வது தவறான அனுகுமுறைஎன்று தெரிவித்துள்ளார்.

சந்திரிகா அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்த யுனைடெட் நேசனல் கட்சிக்கு ஜே.வி.பி.மற்றும் சிங்கள உருமயா என்ற 2 எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந் நிலையில் எதிர்காலத் திட்டங்கள்பற்றி ஆலோசிக்கவும் இந்தப்பிரச்சனை பற்றி ஒரு முடிவு எடுக்கவும் தமிழர் கட்சிகள் அனைத்தும் யு.என்.பி.தலைவரைச் சந்திக்க இருக்கின்றன.

இதற்கிடையில் சந்திரிகா ஜே.வி.பி, சி.டபிள்யூ.சி. மற்றும் சிங்கள உருமயா ஆகிய கட்சித் தலைவர்களுடன்பேசியுள்ளார். மேலும் அனைத்து மதத் தலைவர்களுடனும் பேச்சு நடத்தியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு தரப்பிலும் தீவிரமாக அணி திரட்டிக் கொண்டுள்ளனர்.

கப்பல்களுக்கு இன்சூரன்ஸ்...

இலங்கையில் கடந்த வாரம் கடுநாயகே விமானத் தளத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்துகப்பல்களுக்கும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அந் நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கருதுகின்றன.

இதையடுத்து சில இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்களுக்கு செலுத்த வேண்டிய காப்பீட்டுத் தொகையை 15,000டாலரிலிருந்து 30,000 டாலர் வரை உயர்த்தியுள்ளன. இது தவிர துறைமுகத்தில் பாதுகாப்புப்பலப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கும் தனியாக வசூல் செய்யப் படுகிறதாம்.

இது குறித்து இலங்கைத் துறைமுக ஆமையத் தலைவரும் முன்னாள் கப்பல்படைத் தளபதியுமான அட்மைரல்மோகன் சமரசேகர கூறியதாவது, எந்தவித அச்சுறுத்தலையும் சமாளிக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இந்நிலையில் இலங்கை துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் ஒருபுறம் விடுதலைப் புலிகளாலும் மறுபுறம்இன்சூரன் கட்டண உயர்வாலும் மிரண்டு போயுள்ளன.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X