மத்திய அரசு நடவடிக்கை .. கருணாநிதி திருப்தி
சென்னை:
தனது கைது குறித்தும், சென்னை திமுக பேரணியின்போது நடந்த வன்முறை குறித்தும்தேவையான, திருப்திகரமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது, மேலும்சில நடவடிக்கைகளை அது தொடர்ந்து மேற்கொள்ளும் என்று முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
இரண்டு சம்பவங்கள் குறித்தும் விசாரிக்க கமிஷன்களை தமிழக அரசு அமைத்துள்ளது.இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இரு சம்பவங்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்துவருவது தவறானது. கமிஷனை அவரே மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
தமிழக பாரதீய ஜனதாக் கட்சிக்கும், எங்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ப்பதுதொடர்பாக எந்தப் பூசலும் இல்லை.
காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஆணையம் எங்களது ஆட்சிக்காலத்தில்தான்ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்திற்கு தண்ணீர்த் தேவை என்ற நிலை ஏற்படும் போதெல்லாம்ஆணையத்தை அணுகி வேண்டியதைப் பெற்றிருக்கிறோம். அதேபோல, தற்போதும்ஆணையத்தை அணுக முதல்வர் ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும் என்றார்கருணாநிதி.
இந்த நிகழ்ச்சியின்போது திமுக பேரணியின்போது திமுகவினரை போலீஸார்முன்னிலையில் ரெளடிக் கும்பல் வெட்டுவதாக உள்ள வீடியோக் காட்சிகளையும்நிருபர்களுக்கு கருணாநிதி போட்டுக் காட்டினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!