For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பணி மாற்றம் செய்யப்பட்ட பிறகும் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி ஜெயின் வழக்குகளை விசாரிப்பதுநீதிமன்ற மரபுகளை மீறுவதாக உள்ளது எனக் கூறி வக்கீல் வெங்கடசுப்பராஜூ என்பவர் வழக்குத்தொடர்ந்துள்ளார்.

தமிழக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் நீதிபதி ஜெயின். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்புகர்நாடக மாநில தலைமை நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டார். எனவே இவரது சென்னை ஐகோர்ட்டில்இவரது அதிகாரம் கடந்த 22ம் தேதியோடு முடிவடைந்தது.

ஆனால், டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்குகளில் முதல்வர் ஜெயலலிதாவின் அப்பீல்மனுக்கள் மீதான விசாரணையை ஜெயின் நேற்றும் நடத்தினார். இந்த வழக்குகளில் முதல்வர் தரப்பில் கோரியபடி17 வழக்குகளையும் ஒரே நேரத்தில் விசாரிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்குகள் அனைத்துமே வரும் 27ம்தேதி விசாரிக்கப்படும் என அறிவித்தார்.

முன்னதாக நீதிபதி ஜெயின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து திடீரென ஜெயின் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இன்னும் அவர் கர்நாடக தலைமைநீதிபதியாக பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில் தான் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீதிபதி ஜெயின் எந்த அடிப்படையில்இன்னும் வழக்குகளை விசாரித்து வருகிறார் என்று விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல்செங்கடசுப்பராஜூ என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கே.ஜெயின் அவர்களின் மாற்றல் உத்தரவு 22ம் தேதி முதல் அவர் கர்நாடகமாநில தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டிருக்கிறார் என்று கூறுகிறது. இந்த உத்தரவு இந்திய ஜனாதிபதியால்பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

ஆனால் இந்த உத்தரவு வந்த பிறகும் நீதிபதி ஜெயின் வழக்குகளை விசாரித்து வருகிறார். இது நீதித்துறைமரபுகளுக்கு எதிரானதாகும்.

இவர் தொடர்ந்து பணியில் நீடித்தால் நீதித்துறை மீது பொது மக்களுக்கு சந்தேகம் எழும் சூழ்நிலை உருவாகும்.

கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.இதைத்தொடர்ந்து அவரும் அந்தப் பதவிக்குச் சென்றுவிட்டதால் கர்நாடகத்தில் தலைமை நீதிபதி பதவி காலியாகஉள்ளது.

நிலைமை இப்படி இருக்க, நீதிபதி ஜெயின் உடனே சென்று அந்தப் பதவியை ஏற்கவேண்டுமே தவிர இங்குஇன்னும் பதவில் அமர அவருக்கு உரிமை இல்லை. மேலும் எந்தத் தகுதியின் அடிப்படையில் அவர் இன்னும்இங்கு வழக்குகளை விசாரித்து வருகிறார் என்பது குறித்து கோர்ட் அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று (வியாழக்கிழமை) காலை தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டுஉடனே இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் கோரினார். அதன்படி இந்த மனு மீதானவிசாரணை நேற்று மதியம் நீதிபதிகள் நாராயண குரூப் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்புவந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி மாற்றப்பட்டது குறித்து இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும்வரவில்லை. தலைமை நீதிபதியின் அலுவலகம் என்ன இரும்புத் திரையால் மூடப்பட்டுள்ளதா?. நீதிமன்றப்பதிவாளர் அலுவலகம் தான் எங்களுக்கு இதுபோன்ற தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அந்த பெஞ்ச்கூறியது.

பிறகு பதிவாளர் ஜெனரல் ஜெயராமன் அந்தக் கோர்ட்டில் ஆஜராகி தலைமை நீதிபதியின் மாற்றல் உத்தரவு வந்தவிவரத்தை தெரிவித்தார்.

பிறகு நீதிபதிகள் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றதுடன், வெள்ளிக்கிழமையே (இன்று) விசாரிக்க வேண்டும்என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த மனுவை தலைமை நீதிபதிக்கும் அனுப்ப உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X