For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 விமானங்களில் இருந்த 266 பேரும் பலி

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்காவில் தீவிரவாதிகள் கடத்திய 4விமானங்களில் இருந்த 266 பேரும் பலியாகிவிடனர்.

கடத்தப்பட்ட 4 விமானங்களில் 3 விமானங்கள் திட்டமிட்டு கட்டிடங்களில் மோதச் செய்யப்பட்டதால் அவற்றில்பயணம் செய்த பயணிகளில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் 4 வது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள காட்டில் விழுந்துவிட்டது. இது தானாக வெடித்ததா,அல்லது மோதச் செய்யப்பட்டதா என்று உறுதியாகத் தெரியவில்லை.

இந்த 4வது விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சற்று முன், இதிலிருந்த ஒரு பயணி, விமானத்தின் பாத்ரூமில் இருந்து,"விமானம் கடத்தப்பட்டடு விட்டது" என்று பலமுறை அலறிக் கொண்டே விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு போன்செய்துள்ளார்.

அவருடைய மரண ஓலம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அவ்விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது.

நியூயார்க்கில் உலக வர்த்தக மையக் கட்டங்களில் மோதிய 2 விமானங்களும் அமெரிக்கன் ஏர்லைன்சுக்குசொந்தமானவை. பென்டகன் மற்றும் பென்சில்வேனியாவில் மோதிய விமானங்கள் யுனைட்டட் ஏர்லைன்ஸ்நிறுவனத்துக்கு சொந்தமானவை.

அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான பிளைட்-11 விமானத்தில் 81 பயணிகளும், பைலட்டுகள் உள்பட 11விமான ஊழியர்களும் இருந்தனர். இது பாஸ்டனில் இருந்து லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நோக்கி பறந்து கொண்டிருந்தது.இது இரட்டை எஞ்ஜின் கொண்ட விமானம்.

இரண்டாவது விமானமான பிளைட்-77ல் 58 பயணிகளும் 2 பைலட்டுகளும் 4 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.இது போயிங் 737 ரக விமானம். இது டல்லசில் இருந்து லாஸ் ஏஞ்ஜெல்ஸ் சென்று கொண்டிருந்தது.

பென்டகன் மீது மோதிய யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மூன்றாவது விமானமானபிளைட்-93 நியூயார்க்கிலிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்று கொண்டிருந்தது.

பிட்ஸ்பர்க்கிலிருந்து 80 மைல் தொலைவில் பென்சில்வேனியா காட்டில் விபத்துக்குள்ளான 4வது விமானமும்யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது.

உலக வர்த்தக மைய கட்டடங்கள் மீது விமானங்கள் மோதியபோது அதில் 20,000 பேர் வரை இருந்ததாகக்கூறப்படுகிறது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

இதுவரை 1,000க்கும் மேற்பட்டவர்கள் இவ்விபத்துக்களில் இறந்துவிட்டதாகவும், மேலும்ஆயிரக்கணக்கானவர்கள் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X