ஜெர்மனியில் பெண் உள்பட 2 பேர் கைது
ஹாம்பர்க்:
அமெரிக்காவில் நடந்த விமானத் தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய அரபு நாடுகளைச் (யு.ஏ.ஈ.) சேர்ந்த ஒருஆணும் பெண்ணும் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களின் பெயர் விவரங்களை ஜெர்மன் போலீசார் தெரிவிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவின்எப்.பி.ஐ. துப்பு கொடுத்ததன்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட நபர் ஒரு அபார்ட்மென்ட்டைவாடகைக்கு எடுத்திருந்தார். இவரது வீட்டில் மொராக்கோவை சேர்ந்த நபர் தங்கியிருந்தார். இவரைத் தான்எப்.பி.ஐ. பிடிக்கச் சொல்லியுள்ளது. ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார்.
பிடிபட்ட நபர் ஜெர்மனியில் விமான நிலையத்தில் தாற்காலிகமான ஊழியராக வேலை பார்த்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஹாம்பர்க் நகரில் மேலும் 4 அபார்ட்மெண்ட்களிலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
விமானத்தைக் கடத்தி கட்டடங்களில் மோதிய சம்பவத்தில் தொடர்புடையதாக் கூறப்படும் முகம்மத் அட்டா (வயது33), மார்வான் யூசுஸ் அல்செஹி (வயது 23) ஆகிய இருவரும் கடந்த மே மாதம் வரை ஹாம்பர்க்கில் தான்வசித்துள்ளனர். பின்னர் தான் புளோரிடாவுக்கு வந்துள்ளனர்.
ஹாம்பர்க்கில் உள்ள ஹார்பர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர்கள் பின்னர் புளோரிடாவுக்குவந்து அங்கு வெனிஸ் பகுதியில் உள்ள ஏவியேசன் பிளைட் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இந்த இருவருமே யூ.ஏ.ஈ. நாட்டைச் சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது. பாஸ்டனில் விமான நிலையம் அருகேஅனாதையாக விடப்பட்டிருந்த மிட்சுபிசி காரை இவர்கள் தான் வாடக்ைகு எடுத்தனர் என்பதும்உறுதியாகியுள்ளது. இந்த காரில் அரபி மொழியில் எழுதப்பட்ட பிளைட் மேனுவல்கள் இருந்தன.
ஹாம்பர்க் நகரில் வசிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒசாமா பின் லேடனின் தீவிரவாத நடவடிக்கைகளுக்குபணம் திரட்டித் தரும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற புகார் ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது.
இந்த நகரில் மட்டும் பின் லேடன் ஆதரவாளர்கள் 1,000 பேர் இருப்பார்கள் என்று தெரிகிறது. இவர்கள்நேரடியாக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும் பின் லேடன் அனுப்பி வைக்கும் ஆட்களுக்கு பணம்தருவது, அவர்கள் தங்குவதற்கு வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications