காயமடைந்த இந்தியர்கள் பெயர் விவரம்
நியூயார்க்:
உலக வர்த்தக மையக் கட்டடத்தில் நடந்த விமானத் தாக்குதலில் காயமடைந்த 9 இந்தியர்களின் பெயர் விவரம்தெரியவந்துள்ளது.
இந்த கட்டடங்களில் பணிபுரிந்த 50,000 பேரில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள் தான். எனவே, இறந்த இந்தியர்களின்எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது.
சம்பவத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்த விவரங்களை அறிய நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள பெரும் முயற்சிகள்மேற்கொண்டுள்ளனர்.
தூதரகத்துக்கு இந்தியாவிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தங்கள் உறவினர்கள், நண்பர்கள்,குழந்தைகளின் நிலையை அறிய தொலைபேசியில் பேசுபவர்கள் கண்ணீருடனும் அச்சத்துடனும் கேட்கும் கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாமல் தூதரக அதிகாரிகள் திணறி வருகின்றன.
பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பெயர்கள், முகவரிகளை தூதரகம் சேகரித்தவண்ணம்உள்ளது.
மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பெயர்களை www.indiacgny.org என்ற வெப்சைட்டில் வெளியிட்டவண்ணம் உள்ளது.
இது தவிர தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள 2 தனி தொலைபேசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் எண்கள்212-774-0625 மற்றும் 212-774-0625 ஆகியவற்றின் மூலம் தூதரக அதிகாரிகள் ஆர்.கே. சிங், ஏ.எஸ். பாஜ்பாய் ஆகியோரைத்தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications