For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

32 நாட்கள் .. 15,216 கேள்விகள் ..சட்டசபையில் சாதணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

32 நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் 15,216 கேள்விகள் கேட்கப்பட்டன. 14 மசோதாக்கள்நிறைவேறப்பட்டன என்று சபாநாயகர் காளிமுத்து வெள்ளிக்கிழமை சட்டசபையில் தெரிவிதத்தார்.

கடந்த மே மாதம் 22ம் தேதி சட்டசபை முதல் முதலாக கூடியது. பின்னர் ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும்ஆகஸ்ட் 16ம் தேதி துவங்கியது. வெள்ளிக்கிழமையுடன் இது முடிவடைந்தது.

சட்டசபைக் கூட்டத் தொடர் குறித்து சபாநாயகர் காளிமுத்து கூறுகையில், மொத்தம் 32 நாட்களுக்கு இந்த சபை கூடியுள்ளது. இதில் மாலைநேரங்களில் 14 முறை கூடியது. மொத்தம் 153 மணி நேர அளவிற்கு விவாதம் நடந்துள்ளது. சபையில் மொத்தம் 15216 கேள்விகள்கேட்கப்பட்டுள்ளன.

158 உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டுள்ளனர். துணை கேள்விகளின் எண்ணிக்கை மொத்தம் 407.

விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மொத்தம் 23. இதன் மீது 77 உறுப்பினர்கள் பேசினர். இரண்டு சிறப்புகவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார்.

அனுமதிக்கப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மொத்தம் 33. சட்ட முன்வடிவுகள் அதாவது மசோதாக்கள் 14 நிறைவேற்றப்பட்டுள்ளன.விதி 110ஐ பயன்படுத்தி அமைச்சர்கள் 6 அறிக்கைகளையும், முதல்வர் ஜெயலலிதா 3 அறிக்கைகளையும் தாக்கல் செய்துள்ளார்கள்.

சபையில் கொண்டு வரப்பட்டவெட்டுத் தீர்மானங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனித்தனியாக பதில் அளித்துள்ளார். தமிழக சட்டசபைவரலாற்றிலேயே இது இரண்டாவது முறையாகும்.

காலை, மாலை, மதியம் என நேரம் பாராது, சபைக்கு வந்திருந்து விவாதங்களில் பங்கேற்று, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல்பதிலளித்த முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதேபோல, எதிர்க்கட்சித் தலைவராக அந்தப் பதவிக்குரிய கண்ணியத்தை சிதற விடாமல், கட்டுக்கோப்புடன் செயல்பட்ட அன்பழகன்அவர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்றார் காளிமுத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X