பாமக கூட்டணி வெற்றி கூட்டணி: ராமதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

பா.ம.க. இடம் பெறும் கூட்டணிதான் வெற்றி கூட்டணி. இதை வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் நிரூபிப்போம்என்று அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியள்ளார்.

இது குறித்து விழுப்புரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது.கூட்டணி குறித்து விரைவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசவுள்ளேன்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ம.கவை தி.மு.க. தவறவிட்டவிட்டது. இதற்கு நான் பொறுப்பல்ல. தி.மு.க.கூட்டணியில் ம.தி.மு.கவை இணைக்கும் முயற்சியில் நான் ஈடுபடமாட்டேன். அந்த முயற்சியில்பா.ஜ.க.ஈடுபட்டுள்ளது.

பா.ம.க. இடம் பெறும் கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணிதான். இதை வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலின்போதும் நிரூபிப்போம் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற