எதிர் படையினர் மீது தலிபான்கள் கடும் தாக்குதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

தன்னை எதிர்த்துப் போராடி வரும்நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் மீது தலிபான் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தஆரம்பித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் 7 சதவீத பரப்பளவு இந்தப் படையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஐக்கிய நாடுகள்சபையால் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள புர்கானுதீன் ரப்பானியின் ஆட்சியும் இந்தப் படையைத் தான்ஆதரித்து வருகிறது.

இந்தப் படைக்கு ரஷ்யா, ஈரான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இப் படையின் தலைவர் அகமத் ஷாமசூதி கடந்த வாரம் பின் லேடனின் ரகசியப் படையினரால் கொல்லப்பட்டார்.

இருந்தாலும் மசூதின் படையினர் தொடர்ந்து தலிபான்களுடன் போரில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவுடன் இணைந்துதலிபான்களைத் தாக்கவும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பையடுத்து அவர்கள் மீதான தாக்குதலை தலிபான் தீவிரப்படுத்தியுள்ளது.

எதிர்ப் படையினருக்கு உணவு செல்லும் வழியை அடைக்க இந்தத் தாக்குதலை தலிபான் நடத்தி வருகிறது. ஆனால், பதில்தாக்குதல் மிகக் கடுமையாக இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கலாப்கன் பகுதியில் சில மலைக் குன்றுகளை தலிபான்கள் கைப்பற்றினர். ஆனால், நள்ளிரவில் எதிர்ப்புப் படையினர் பதில்தாக்குதல் நடத்தி அந்த குன்றுகளை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற