பிலிப்பைன்சில் குண்டு வெடிப்பு... 2 இந்தியர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணிலா:

பிலிப்பைன்சில் மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு இடத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக, 2இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவின் கிழக்குப் பகுதியில், ஒரு மளிகைக் கடையில் திங்கள்கிழமை இந்தக்குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் காரணமாக, பங்கஜ் குமார் (27), பங்கஜ் ஜெயின் (20) ஆகிய 2 இந்திய இளைஞர்களையும், ஒருபாகிஸ்தானியரையும், ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

6 பிளாஸ்டிக் கன்டெய்னர்களை இந்த 4 பேரும் அந்தக் கடையில் விட்டுவிட்டுச் சென்றதாகவும், அவற்றில்அம்மோனியம் நைட்ரேட் என்னும் வெடிபொருள் நிரப்பப் பட்டிருந்ததாகவும் நேரில் பார்த்த சிலர் கூறினர். இவைகுறிப்பிட்ட நேரத்தில் "செட்" பண்ணி வைக்கப்பட்ட "டைம் பாம்"கள் என்று கூறப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ஒரு குண்டு மட்டும் தவறுதலாக வெடித்துவிட்டது. இதனால், அந்தக் கடை முழுவதுமாகச்சேதமடைந்தது. அருகிலிருந்த சில வீடுகளும் சேதமடைந்தன.

இதையடுத்து, அந்த மளிகைக் கடை இருந்த தெரு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. மக்கள் இங்கும்அங்குமாக ஓடினர். அருகிலுள்ள பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை மீட்பதற்காக, பெற்றோர்களும்அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு சற்று முன்னர்தான், அந்த 4 பேரும் அருகிலுள்ள ஒரு ஓட்டலில், முழுவதுமாகச்சோதிக்கப்பட்டனர். ஏன் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டது என்று தெரியவில்லை. போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற