இந்திய அமைச்சரவை அவசர ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றை சமாளிப்பது குறித்தும்மத்திய அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) அவசரமாகக் கூடி விவாதித்தது.

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் விளக்கினார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரிக்கலாம் என்ற அம் மாநில முதல்வர் பரூக் அப்துல்லாவின் அச்சம் குறித்தும்விவாதிக்கப்பட்டது. அதை சமாளிக்க ராணுவத்தை தயார் நிலையில் வைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

போர் தொடங்கினால் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயரும் என்பதால் அந்தப் பிரச்சனையையை சமாளிப்பது குறித்தும்விவாதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானைக் தாக்க இந்திய வான் பகுதியை பயன்படுத்த அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி அளிப்பது,தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியா பங்கேற்பது ஆகிய விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டன. சில அமைச்சர்கள் இதற்குஎதிர்ப்பத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அவசரப்பட்டு எந்த முடிவு எடுக்க வேண்டாம் என ஜஸ்வந்த் சிங்கையும் பிரதமரையும் சில அமைச்சர்கள் எச்சரித்ததாகவும்தெரிகிறது.

தன்னிடம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் பேசியது குறித்து அமைச்சரவை சகாக்களுக்கு வாஜ்பாய் விளக்கினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற