கலெக்டர் வீட்டை முற்றுகையிட்ட சிவகங்கை மாணவிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

தங்கள் விடுதி வார்டன், வீட்டு வேலைகளைச் செய்வதற்குத் தங்களைப் பயன்படுத்துவதாகக் கூறிசிவகங்கையிலுள்ள விடுதி ஒன்றின் மாணவிகள், இதுகுறித்து புகார் கொடுப்பதற்காக மாவட்ட கலெக்டருடையவீட்டை முற்றுகையிட்டனர்.

சிவகங்கை மேலரத வீதியில் உள்ள ஒரு மாணவிகள் விடுதியில், 40 மாணவிகள் தங்கி, பள்ளிகளில் படித்துவருகின்றனர்.

பிற்பட்டோர் நலத் துறைக்குச் சொந்தமான அந்த விடுதியில், தேவையான கழிவறை வசதிகள் இல்லை என்றும்குடிநீருக்கும் அங்கு பெரும் திண்டாட்டம்தான் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கொடுமைகளெல்லாம் போக, தன் வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லி, அந்த விடுதியின் வார்டன், இந்தமாணவிகளை வற்புறுத்தியுள்ளார்.

கொதித்துப் போன மாணவிகள், ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜஸ்பீர்சிங்பஜாஜின் வீட்டை முற்றுகையிட்டனர். அந்த வீட்டின் முன் தரையில் உட்கார்ந்து போராடவும் ஆரம்பித்தனர்.

தகவல் அறிந்த கலெக்டர், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து,தாசில்தார் உட்பட சில அதிகாரிகள், கலெக்டர் வீட்டுக்கு விரைந்தனர்.

மாணவிகள் அனைவரும் தங்கள் கொடுமைகளையெல்லாம் கொட்டித் தீர்த்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். அதிகாரிகளும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஉறுதியளித்த பின்னர், மாணவிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, விடுதிக்குத் திரும்பினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற