62 நாடுகளைச் சேர்ந்த 5000 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டடங்களில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் 62 நாடுகளைச்சேர்ந்த சுமார் 5,000 பேர் பலியாகியுள்ளனர்.

இவர்களில் விமானங்களில் இருந்தவர்களும் அடங்குவர். உலக வர்த்தக மையத்தில் பல நாட்டு நிறுவனங்களுக்கும்அலுவலகங்கள் இருந்தன. இதனால் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டினர் தான்.

இதில் இந்தியர்கள் 250 பேர். பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 300 பேர். ஜெர்மானியர்கள் 200 பேர். ரஷ்யர்கள் 117பேர்.

இவர்கள் தவிர அரேபியர்கள், கனடா, இந்தோனேஷியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும்நூற்றுக்கணக்கில் பலியாகியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற