இந்திய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பலத்த பாதுகாப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்க நேர்ந்தால், இந்தியாவில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவனங்களைத்தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக, அந்நிறுவனங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பை கடல் பகுதியிலுள்ள எண்ணெய் நிறுவனம், இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் ஓ.என்.ஜி.சி. உள்படநாட்டிலுள்ள முக்கியமான எண்ணெய் நிறுவனங்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

கடந்த வார இறுதியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது.

மும்பையில் நடுக்கடலில் அமைந்துள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு விமானங்கள் மூலமாகவும் பாதுகாப்பு வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா முழுவதிலும் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், தங்களுடைய பாதுகாப்புகளைப் பலப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆப்கனை அமெரிக்கா தாக்குவதால் உலகச் சந்தையில் எண்ணெய் பொருட்களின் விலையில் இறக்கம்காணப்படுமா, எண்ணெய் சப்ளையில் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்தும் அரசு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற