500 தற்கொலைப் படையினருடன் பதுங்கியிருக்கும் ஒசாமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஒசாமா பின் லேடன் எங்கே இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

பிதாயீன்கள் என அழைக்கப்படும் தனது நெருங்கிய 500 தற்கொலைப் படை பாதுகாவலர்களுடன் அவர்ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களின் தலைமையகமான காண்டஹாரை விட்டு குதிரைகளில்வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பாதுகாவலர்களுடன் கார்களில் ஊர்வலமாக வெளியேறினால் அமெரிக்க செயற்கைக் கோள்களின் கண்ணில்பட்டுவிடும் அபாயம் இருப்பதால் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து குதிரைகளில் தான் அவர் தப்பினார் எனபாகிஸ்தானின் டான் நாளிதழ் தெரிவிக்கிறது.

தலிபான் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு தனது கார்களை அங்கேயே விட்டுவிட்டு ஒசாமா சென்றதாகக்கூறப்படுகிறது. கார்கள் மூலம் அடைய முடியாத மலைப் பகுதிக்கு அவர் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

அவர் இருக்குமிடம் தலிபான் ஆட்சியாளர் முல்லா ஒமருக்கு மட்டுமே தெரியும் என்றும் நாளிதழ் தெரிவிக்கிறது.

அவர் அங்கிருந்து போன இடம் குறித்து தெரியவில்லை. அவருடன் இருக்கும் தற்கொலைப் படையினர்அனைவரும் அரேபியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காபூலின் அருகே இருக்கும் சரார்-ஏ-அன்சாரி என்ற இடத்தில் அமெரிக்காவை எதிர்த்து கடைசி வீரன் உயிருடனஇருக்கும் வரை போராடுவேன் என ஒசாமா தனது படையினருடன் ஏற்கனவே உறுதி எடுத்துள்ளதாக அரேபியநாளிதழ்கள் கூறுகின்றன.

குதிரைகள் ஓட்டுவதில் வல்லவரான ஒசாமாவிடம் பல அரேபிய குதிரைகள் உள்ளன. காண்டஹாரிலும் நின்கரார்நகர்களிலும் உள்ள தனது பண்ணைகளில் இந்த குதிரைகளை ஒசாமா பராமரித்து வந்தார். குதிரை ஒட்டுவதில்மிகுந்த ஆர்வமும் உடைவன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற