21ம் தேதி பாகிஸ்தானில் மதவாதக் கட்சிகள் ஸ்ட்ரைக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் உதவுவதைக்கண்டித்து வரும் 21ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த 20 மதவாத அரசியல் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

அமெரிக்காவுக்கு உதவ பாகிஸ்தானில் பொது மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு நிலவுகிறது. ராணுவத்திலும் ஒருபிரிவினர் பின்லேடனின் ரசிகர்களாக இருப்பதால் பிரச்சனை அதிகமாகி வருகிறது.

இந் நிலையில் முஷாரபின் முடிவை எதிர்த்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புக் கவுன்சில்போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது. இந்தக் கவுன்சிலின் கூட்டம் லாகூரில் நடந்தது. தலிபான்களின்மதப்போருக்கு ஆதரவளிக்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது நடக்கும் தாக்குதல் பாகிஸ்தான் மீதான தாக்குதல் மாதிரி தான் என இந்தக் கவுன்சில்கூறியுள்ளது.

இதில் பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்புகளான ஜமாத்-ஏ-இஸ்லாமி, லக்ஷர்-ஏ-தொய்பா ஆகிய அமைப்புகளும்இடம் பெற்றுள்ளன. இவை காஷ்மீரில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற