தேனியில் தீக்குளிக்க முயற்சித்தவரை பாய்ந்து சென்று தடுத்த போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட "சீட்" கிடைக்காது என்று மனமுடைந்து அதிமுக பிரமுகர் ஒருவர் தீக்குளிக்கமுயன்றார். அப்போது அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பாய்ந்து சென்று தடுத்தார்.

தேனி வருசநாடு அருகே உள்ள பொன்னம்படுகை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். அதிமுகபிரமுகரான இவர் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக கடமலைக்குண்டு பகுதியில்போட்டியிட சீட் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் தனக்கு சீட் கிடைக்காது என்று முடிவுசெய்து மனம் உடைந்து தீக்குளிப்பில் இறங்க திட்டமிட்டார்.

இதையடுத்து, ஒரு கேனில் மண்ணெண்ணையுடன் தேனி நேரு சிலைக்கு அருகே வந்தார். பின்னர், திடீரென தன்உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றார்.

அப்போது, அந்த வழியாக ரோந்து வந்துகோண்டிருந்த போக்குவரத்துத் துறை சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த்இதைக் கவனித்துவிட்டார். உடனே அவர் தங்கப்பாண்டியன் மீது பாய்ந்து, அவர் மீது தீபற்றிவிடாமல் தடுத்துநிறுத்தினார்.

பிறகு தங்கப்பாண்டியனைக் கைது செய்தார் பிரேம் ஆனந்த். போலீசார் தங்கப்பாண்டியன் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரித்துவருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற