சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் புதிய தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் புதன்கிழமைசென்னையில் நடைபெறுகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு ஜி.கே.வாசன் காலை 9 மணிக்கு வருகிறார்.
அங்கு அவருக்கு தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்துகின்றனர். பின்னர் 10 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம்நடக்கிறது.
இதில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் யுக்திகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
மாலையில் 3 மணிக்கு மாநில அளவிலான நிர்வாகிகள், மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின்கூட்டம் நடக்கிறது.
அது முடிந்த பிறகு 5 மணியளவில் முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஜி.கே.வாசன் தனியாக ஆலோசனை நடத்துகிறார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!