போரை தவிர்க்க முடியாது: இந்தியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

அமெரிக்க-ஆப்கானிஸ்தான் போரைத் தவிர்க்க முடியாது என இந்தியா கூறியுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி அகமதாபாத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்க வேண்டியஅவசியமே இல்லை. நிச்சயம் தாக்கும். தன் நாட்டையும் அப்பாவிப் பொது மக்களையும் தாக்கிய தீவிரவாதிகளைஅமெரிக்கா திருப்பி அடித்தே ஆக வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக உலகில் உள்ள ஜனநாயக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர வேணடும். தங்கள் மீதுநம்பிக்கை இல்லாத கும்பல்கள் தான் தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன.

அமெரிக்காவுக்கு நிபந்தனைகள் விதிக்கும் நிலையில் பாகிஸ்தான் இல்லை. நிபந்தனைகள் எதையும் அந் நாடுவிதிக்கவே இல்லை என இந்தியாவில் இருக்கும் அமெரிக்கத் தூதர் பலமுறை என்னிடம் கூறிவிட்டார் என்றார்அத்வானி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற