குப்பைத் தொட்டியில் அடைக்கலமாகும் பெண் சிசுக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் குப்பைத் தொட்டியில் பெண் சிசுக்களை போட்டு விட்டுப் போவது இன்னும் நின்றபாடில்லை.

இந்த நிலையில் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் புதன்கிழமை ஒரு பெண் சிசு அநாதையாக விடப்பட்டிருந்தது. குப்பைத்தொட்டிக்குள் குழந்தை அழும் சப்தம் கேட்ட சிலர் அதை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பரிதாபமாகஅந்தக் குழந்தை இறந்து விட்டது.

பிறந்து சில மணி நேரத்திலேயே அந்தக் குழந்தை குப்பைத் தொட்டியில் போடப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். கள்ளக் காதல் அல்லது தகாத உறவில்அந்தக் குழந்தை பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற