பதவி ஏற்பு to

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர் அரசு நிலமான டான்சி நிலத்தை வாங்கியது தொடர்பாகவும்கொடைக்கானலில் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் கட்ட அனுமதி கொடுத்ததிலும் ஊழல் செய்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.இதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து கருணாநிதி முதல்வராக இருந்தபோது கைது செய்யப்பட்ட ஜெயலலிதா சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார். ஆனால், ஜாமீனில் அவரை தமிழக அரசு விடுவித்தது.

இதையடுத்து கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுகவை மண்ணைக் கவ்வ வைத்தார்ஜெயலலிதா. ஆனால், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

ஆனாலும் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து எம்.எல்.ஏவாக இல்லாத ஜெயலலிதாவை அப்போதைய ஆளுனர் பாத்திமாபீவி முதல்வராக நியமித்தார். இதை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசும், அதில் இடம் பெற்றிருந்த திமுகவும் கடுமையாக எதிர்த்தன.

கடந்த மே மாதம் 14ம் தேதி அவசர அவசரமாக ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றார்.

நடந்தது என்ன?

ஏப்ரல் 24, 2001: ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய 4 இடங்களில் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்புமனுக்கள்தள்ளுபடி செய்யப்படுகின்றன.

2 ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனைபெற்றவர்கள் தேர்தலில் போட்டிய முடியாது என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(3) ஐ மேற்கோள்காட்டி,இந்த 4 மனுக்களையும் தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

மே 10, 2001: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றிபெற்றது.

மே 14, 2001: தமிழக கவர்னர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்கு தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜூன் 29, 2001: கருணாநிதியும் மாறனும் அவர்களது வீட்டில் போலீசாரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

ஜூலை 1, 2001: கருணாநிதி தாக்கப்பட்ட விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவான அறிக்கை கொடுத்ததாகக் கூறி பாத்திமா பீவியை ராஜினாமாசெய்ய வைத்தது மத்திய அரசு. தொடர்ந்து சில நாட்களில் ஆந்திர ஆளுநர் ரங்கராஜன் கூடுதல் பொறுப்ாக தமிழக ஆளுநராகவும் பொறுப்பேற்றார்.

செப்டம்பர் 4, 2001: தன் மீதான டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை விரைவாக நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

செப்டம்பர் 6, 2001: ஜெயலலிதா தான் முதல்வராக வருவார் என்ற தெரிந்துதான் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து, பெரிய வெற்றியைக்கொடுத்தனர். மக்களின் தீர்ப்பைவிட, சட்டம் பெரியதா?. மக்களுக்காகத்தானே சட்டம் இயற்றப்பட்டுள்ளது? என்று ஜெயலலிதாவின் வக்கீல்சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு நீதிபதிகள் மக்களின் ஆதரவை பெற்றுவிட்டால் எண்ணவேண்டுமானாலும் செய்யலாமா. பிறகு சட்டம் எதற்கு என்று பதில் கேள்விகேட்டனர்.

செப்டம்பர் 7, 2001: சென்னை உயர் நீதிமன்றத்தில் டான்சி வழக்கு அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு தான்மீண்டும் ஆரம்பிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செப்டம்பர் 20, 2001: டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளை விசாரிக்க, நீதிபதி தினகரை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமைநீதிபதி சுபாஷன்ரெட்டி உத்தரவிட்டார்.

செப்டம்பர் 21, 2001: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. பரபரப்பான இந்தத் தீர்ப்பால்ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற