புதிய முதல்வர் இன்றே பதவியேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்ததை அடுத்து, இன்று மாலைக்குள்ளாகவே புதிய முதல்வர்பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய முதல்வர் பதவியைப் பறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, இன்று தன்னுடையராஜினாமாக் கடிதத்தை ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜனிடம் அளித்தார் ஜெயலலிதா. ஆளுநரும் அந்தராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, இன்று மாலை 6 மணிக்கு கூடும் அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில், சட்டசபையின் அதிமுகதலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபர் இன்றே தமிழக முதல்வராகப்பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.

சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய ஆளுநரும், இன்றே புதிய முதல்வருக்குப் பதவிப் பிரமாணம்அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார் என்று ராஜ் பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதாவின் அரசியல் பயணம்

1981 - திரை நட்சத்திரமாக ஜொலித்து வந்த இவர், அந்த உலகிற்கு முழுக்குப் போட்டுவிட்டு, அரசியலில் குதித்தார்.எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுகவில் சேர்ந்தார்.

1982 - அரசியலில் குதித்த ஒரு ஆண்டிலேயே, இவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியைப் பெற்றுத் தந்தார்எம்.ஜி.ஆர்.

1987 - டிசம்பர் 24ல் எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, இரண்டாக உடைந்த அதிமுகவின் ஒரு பிரிவுக்குத் இவர்தலைவியானார். மற்றொரு பிரிவு அதிமுகவுக்கு எம்.ஜி.ஆரின் துணைவி ஜானகி தலைவியானார்.

1991 - மே 21ல் ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு, கருணாநிதிதான் காரணம்என்று கூறி, அப்போதைய பிரதமர் சந்திரசேகர் உதவியுடன் திமுக அரசைப் பதவி நீக்கம் செய்யச் செய்த இவர்,அப்போது நடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.

1996 - பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுக்கள் காரணமாக, ஆட்சியை இழந்ததோடு மட்டுமல்லாமல், டி.வி.வாங்கியதில் நடந்த ஊழல் காரணமாக, இவர் ஒரு மாதம் ஜெயலிலும் அடைக்கப்பட்டார்.

1997 - தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, இவர் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள்துவங்கின.

1998 - நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து, இவர் பெரும் வெற்றி பெற்றார்.

1999 - பா.ஜ.கவுடனான கூட்டணியை இவர் முறித்துக் கொண்டார். அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்சரியாகச் சோபிக்கவில்லை.

2000 - டான்சி ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை இவருக்குக் கிடைத்தது.

ஏப்ரல் 2001 - சட்டசபைத் தேர்தலில் இவர் தாக்கல் செய்த 4 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. ஊழல் வழக்கில்தண்டனை பெற்றதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

மே 2001 - இவர் எம்.எல்.ஏ. ஆகாவிட்டாலும், அதிமுக பெற்ற அமோக வெற்றி காரணமாக, தமிழக முதல்வராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

21 செப்டம்பர் 2001 - ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், முதல்வர் பதவியில் இவர் நீடிக்கக் கூடாது என்றுஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இவர் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற