விஷக் காளானைச் சாப்பிட்ட 11 பேர் மயக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருவண்ணாமலை அருகே காளானைச் சாப்பிட்ட 11 பேர் மயங்கி விழுந்தனர். அனைவரும் தற்போதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரும் இவரது அண்ணன், தம்பிகளும் கூட்டுக்குடும்பமாக இருந்து வந்தனர். தேவராஜின் மனைவி சாந்தி, வீட்டிற்கு அருகே முளைத்திருந்த காளான்களைப்பறித்துக் கொண்டு குழம்பு வைத்துள்ளார்.

பின்னர் இதை வீட்டிலுள்ள 11 பேரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அனைவருக்கும்வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தனியார் மருத்துவமனை ஒன்றில் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கதிர்வேலு என்ற சிறுவன் மட்டும்மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

சாந்தி சமையல் செய்தது விஷக் காளானாக இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியறிந்தஅமைச்சர் எஸ்.எஸ்.திருநாவுக்கரசு உடனடியாக தானியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்துசிகிச்சை பெற்றவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற