சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது - கருணாநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள விஷயத்தில், சட்டம் தன்கடமையைச் சரியாகச் செய்துள்ளது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.

3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்றுஅறிவிக்கவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரூச்சா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தனது தீர்ப்பில்ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று கூறியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்ற தீர்ப்பின் மூலம் சட்டம் தன் கடமையைச் சரியாகச்செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பினால் எனக்கு மகிழ்ச்சியும் இல்லை, வருத்தமும் இல்லை.

மேலும் சட்டத்தை மதிப்பவர்கள் யாராக இருந்தாலும், இந்தித் தீர்ப்பின் மூலம் திருப்தி அடையாமல்இருக்கமுடியாது. நானும் சட்டத்தை மதிப்பவன் என்ற முறையில், இந்தத் தீர்ப்பினால் திருப்தி அடைகிறேன்.

உண்மையை கொஞ்சகாலம் தான் மறைக்க முடியும், நீண்டகாலத்திற்கு மறைக்க முடியாது என்பது இந்தத் தீர்ப்பின்மூலம் விளங்குகிறது.

தமிழக மக்கள் இந்தச் செய்தியை அறியும்போது அவர்கள் அதை எடுத்துக்கொள்ளும் மனோபாவத்தைப்பொறுத்து, ஜெயலலிதாவின் மீது மக்களின் அனுதாபம் அமையும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

நல்ல தீர்ப்பு - வைகோ

சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ள இந்தத் தீர்ப்பின் மூலம் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைவலிவும், பொலிவும் பெறும். இது ஒரு முக்கியமான நல்ல தீர்ப்பு என்று வைகோ கூறினார்.

ஜெ.க்கு சிறந்த பாடம் - ராமதாஸ்

சுப்ரீம் கோர்டடின் இந்தத்தீர்ப்பு ஜெயலலிதாவின் எதிர்கால அரசியலுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையும். தமிழகமக்கள் தவறு செய்தவர்களை இனியும் அனுமதிக்கமாட்டார்கள் என்றார் ராமதாஸ்.

ஜெ.வைப் பாராட்டுகிறார் (?) இல.கணேசன்

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றுக்கொள்வது செல்லாது என்று பாரதீய ஜனதாக் கட்சி ஆரம்பத்திலேயேகூறியிருந்தது. தற்போது அது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மூலம் நிரூபணமாகியுள்ளது.

சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஆட்சிப்பொறுப்பில் நீடிக்கவேண்டும் என்று இனி யாரும்எண்ணமாட்டார்கள்.

இவ்வாறு யாரும் எண்ணக் கூடாது என்பதற்கு சிறந்த முன் உதாரணமாகத்திகழும் ஜெயலலிதாவை அந்த வகையில்நான் பாராட்டவேண்டும் என்று எல்.கணேசன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற