மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் அவசரக் கூட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்டியுள்ளார்.

தனது பதவியைப் பறிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதையடுத்து உடனடியாக அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்திய ஜெயலலிதா அமைச்சர்களுடன் இப்போது போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில்ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந் நிலையில் மாலை 6 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டத்தையும் கூட்டியுள்ளார். இதில் தனதுஅடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஜெயலலிதா தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இடைக்கால முதல்வராக இக் கூட்டத்திலேயே சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த யாரையாவது அல்லதுநெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சியை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த முதல்வர் யார் என்பதுகுறித்து பல யூகங்கள் நிலவுகின்றன.

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த பாஸ்கரன், தினகரன், சசிகிலா, இளவரசி, அனுராதா தினகரன், மறைந்த மாஜி மந்திரிநெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி, அமைச்சர்கள் பொன்னையன், சரோஜா, வளர்மதி ஜெபராஜ், வளர்மதிஇவர்களில் யாராவது ஒருவர் தான் அடுத்த முதல்வர் என ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில்தொண்டர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

ஆனால், ஜெயலலிதாவின் அதிரடி அரசியலை புரிந்து கொண்டவர்கள் யாரும் எந்த யூகத்துக்கு செல்ல தயாராகஇல்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற