எம்.எல்.ஏக்கள் கூடினர்: இன்று இரவே புதிய முதல்வர் பதவியேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில்குவிந்துள்ளனர்.

இன்னும் சிறிது நேரத்தில் ஜெயலலிதா வந்தவுடன் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்.இதையடுத்து ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய முதல்வருடன் இன்று இரவே ஆளுநர் மாளிகைக்குச் செல்வார்.

அங்கு முதல்வர் பதவியேற்பார். உடன் சில புதிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்ற தெரிகிறது.

ஜெயலலிதாவின் நியமனம் செல்லாது என்பதால் அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் நியமனமும் செல்லாது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறிவிட்டது. இதனால் அமைச்சர்களும் இன்று இரவே ராஜினாமா செய்வார்கள் என்று தெரிகிறது.

இந்த புதிய முதல்வர் ஏற்பாடு இடைக்கால ஏற்பாடு தான் என ஜெயலலிதா கூறியுள்ளார். விரைவில் நான் குற்றமற்றவள் என்பதைநிரூபித்து மீண்டும் முதல்வராவேன். இதனால் தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும்ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் வன்முறையில் இறங்கி தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும்ஜெயலலிதா கூறியுள்ளார்.

முன்னதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற