இன்றே புதிய முதல்வர் பதவியேற்பு? - ஆளுநர் அவசர ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, சட்டஆலோசகர்களுடன் தமிழக ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

அடுத்த முதல்வராக யாரை நியமிப்பது என்று தன்னுடைய அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின்போது, அடுத்த முதல்வர் யார் என்பது தெரிய வரும்.

இந்நிலையில், இன்றைக்குள்ளாகவே புதிய முதல்வரை நியமித்துவிட வேண்டும் என்று ஆளுநர்முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக அவர் சட்ட ஆலோசர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, முதல்வர்அலுவலகத்தில் இருந்தும் ராஜ் பவனுக்குத் தகவல்கள் பறந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவியான விசாலாட்சியே அடுத்தமுதல்வர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற