ஜெ. பதவி பறிப்பு: தழிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக்கொண்டது செல்லாது என்று சுப்ரீ"ம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில வருடஙகளுக்கு முன்பு டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துதனிநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து தர்மபுரியில் சில அதிமுக தொண்டர்கள் ஒரு பஸ்ஸை தீவைத்துக் கொளுத்தினர். இதில் அந்தபஸ்சுக்குள் இருந்த 3 விவசாயக் கல்லூரி மாணவிகள் எரிந்து சாம்பலாயினர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையேஉலுக்கியது.

தற்போது ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் குறிப்பாகத்தென்மாவட்டங்களில் கலவரம் எதுவும் ஏற்படாமலிருக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

மேலும் சென்னையின் பல பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னைராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகம் மற்றும் ஜெயலலிதாவின் வீடு அமைந்துள்ள போயஸ்கார்டன்ஆகிய இடங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நெயில்வால், தனது திறமையைக் காட்டவேண்டியஅவசியம் இன்றே ஏற்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.

இதுவரை எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற