தினகரன் வெற்றிக்கு பாடுபட்டவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரியகுளம்:

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜமாத் கட்சியைச் சேர்ந்த அபுதாஹிரை வென்றுஎம்.எல்.ஏவானவர் பன்னீர்செல்வம். இவருக்கு வயது 52.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர்பல்கலைக்கழகத்தில் எக்கனாமிக்ஸ் பாடத்தில் பி.ஏ. பட்டம்பெற்றவர்.

கடந்த மக்களைவைத் தேர்தலில் சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் பெரியகுளம் தொகுதியில்போட்டியிட்டபோது அவரது வெற்றிக்காக அரும்பாடுபட்டார். அப்போதே இயக்கப் பணிகள் மூலம்ஜெயலலிதாவைக் கவர்ந்தார்.

பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்தபோது பல நற்பணிகளைச் செய்து தொகுதி மக்களைக் கவர்ந்தார்.இதையடுத்து 1997ம் ஆண்டு இவரை தேனி மாவட்ட அதிமுக செயலாளராக நியமித்தார் ஜெயலலிதா.

முதல்முதலாக எம்.எல்.ஏ ஆனவுடனேயே வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 5 மாதத்திலேயேமுதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற