ஜெ. கொடும்பாவி எரித்த பா.ஜ.க. தொண்டர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் அதிமுக தொண்டர்கள் வாஜ்பாய் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தியதை எதிர்த்துஜெயலிலதா கொடும்பாவியை எரித்த பாரதீய ஜனதாத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் தமிழகம் முழுவதிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்குபிரதமர் வாஜ்பாய் மற்றும் பாஜகதான் காரணம் என்று கூறி வாஜ்பாய் கொடும்பாவியை அவர்கள் எரித்துவருகின்றனர்.

இதைக் கண்டித்து சேலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை பாஜகவினர் எரித்தனர்.

இதையடுத்து பாஜக தொண்டர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் வாஜ்பாய் கொடும்பாவியைஅதிமுகவினர் எரித்தபோது யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற