மதுரை, சேலத்திலும் அதிமுகவே போட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரை மற்றும் சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுகவே போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களின்பெயரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளர்களாக ஏற்கனவேஅதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 மாநகராட்சி மேயர் பதவிக்கானவேட்பாளர்களின் பெயர்களை அதிமுக அறிவித்துள்ளது.

மதுரை மேயர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த செல்லூர் ராஜு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மதுரைமேற்கு பகுதி அதிமுக செயலாளராக இருக்கிறார்.

இதேபோல, சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் சுரேஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மாநகர்மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருக்கிறார்.

இதுதவிர 41 நகராட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தற்போது திருச்சி மற்றும் நெல்லை ஆகிய மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்களை மட்டுமே அதிமுககூட்டணி அறிவிக்க வேண்டும். அனேகமாக இந்த இரண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு செய்யாமலேயே, 2 சுற்று வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதாவெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற