குழப்பத்தில் அதிமுக கூட்டணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கூட்டணியில் த.மா.கா. உள்ளிட்ட மற்ற தோழமைக் கட்சிகளின் முடிவைப்பற்றி கவலையில்லாமல்முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவருவதால் அந்தக்கூட்டணியில் குழப்பம் நீடித்துவருகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டடணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பாட்டானி மக்கள் கட்சி ஆகியகட்சிகள் கூட்டணியைவிட்டு விலகிவிட்டன. தற்போது அந்தக் கூட்டணியில் இருப்பது தமிழ் மாநில காங்கிரஸ்மற்றும் கம்ணனிஸ்ட் ஆகியவைதான் முக்கியக் கட்சிகள்.

இந்தக் கட்சித்தலைவர்களுடன் ஒருபக்கம் அதிமுக தலைவர்கள் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில்ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஒரு உடன்பாட்டிற்கு வராமல் இருக்கிறார்கள்.

ஆனால் அதிமுக தலைவியும் கூட்டணித் தலைவியுமான ஜெயலலிதா அதிமுக சார்பில் போட்டியிடும்தொகுதிகளையும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். இதுவரை 4 மாநகராட்சிகளுக்கு மேயர்பதவிக்கான அதிமுக வேட்டபாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்னர்.

மேலும் மொத்தமுள்ள 102 நகராட்சிகளில் 49 நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் ஜெயலலிதாஅறிவித்துவிட்டார்.

த.மா.கா. கடந்தமுறை திமுகவுடன் கூட்டணி வைத்தபோது அக்கட்சிக்கு 36 சதவீத இடங்கள் அளிக்கப்பட்டது.

இப்போது அதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரசும் பிரிந்துவிட்ட சூழ்நிலையில் 40 சதவீத இடங்களைத.மா.காவினர் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் அந்த அளவு இடங்கள் கிடைக்காதுஎன்பது உறுதி.

இதேநிலைதான் அந்தக் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுககூட்டணிக் கட்சிகள் தொகுதிப்பங்கீட்டில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற