உயர்கிறது மேட்டூர் அணை நீர்மட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்துவருவதால், அணையின் நீர்மட்டம்உயர்ந்து வருகிறது. இதனால் நாளை (புதன்கிழமை)முதல் மின்உற்பத்தி தொடங்குகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர்அணையின் நீர்மட்டம் மிகக்குறைந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடமுடியாத அளவுக்குப் போய்விட்டது.

இதனால் அணையின் அருகில் அமைக்கப்பட்டுள்ள 4 நீர்மின் நிலையங்களில் 3 நிலையங்களில் மின் உற்பத்திநிறுத்தப்பட்டது.

இந்த மின்நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 360 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

ஆனால் அணையின் நீர்மட்டம் குறைந்ததையடுத்து 200 மெவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பிறகு 3மின்நிலையங்களில் மின்உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது.

சரங்க நீர்மின்நிலையத்தில் மட்டும் மின்உற்பத்தி நடைபெற்றுவந்தது.

தற்போது அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்திருப்பதால், 4 மின் நிலையங்களிலும் நாளைமுதல் மீண்டும்மின்உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.

ஆரம்பத்தில் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படும் என்றும், அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தால்மின்உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற