காவிரி ஆணைய கூட்டத்தை உடனே கூட்ட மத்திய அரசுக்கு முதல்வர் அவசரக் கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரிப் படுகையில் உள்ள பயிர்கள் வாடுவதைத் தடுக்க உடனடியாக காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக அரசுமத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 22ம் தேதி இந்தக் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால், திடீரென முதல்வர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலக வேண்டிய சூழ்நிலைஏற்பட்டதால் இக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே இப்போது உடனடியாக காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கு நாளை பிரதமரிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினந்தோறும் குறைந்தபட்சம் 1 டி.எம்.சி. நீரையாவது கர்நாடகம் வழங்க வேண்டும் என தமிழகம் கோரி வருகிறது. இதன் மூலம் வாடஆரம்பித்துள்ள குறுவைப் பயிர்களை கொஞ்சமாவது காப்பாற்ற முடியும் என தமிழகம் விளக்கியுள்ளது.

இம் மாத துவக்கத்தில் பிரதமரை தமிழக அனைத்துக் கட்சியினர் சந்தித்துப் பேசினர். அப்போது உடனடியாக தண்ணீர் திறந்துவிடுமாறுகர்நாடகத்தை பிரதமர் வற்புறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால், தங்கள் மாநிலத்திலேயே கடும் வறட்சி நிலவுவதால்தண்ணீர் திறந்துவிட முடியாது என மத்திய அரசிடம் கர்நாடகம் கூறிவிட்டது.

இதையடுத்து கடந்த 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. உடனடியாக தமிழகத்துக்குத் தண்ணீர்திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழகம் கோரியிருந்தது.

இந்த வழக்கில் கர்நாடக அரசுடன் சேர்த்து மத்திய அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்து விளக்கம் கேட்க வேண்டும் எனவும் தமிழகம்கோரியிருந்தது.

இந் நிலையில் காவிரி ஆணையத்தைக் கூட்ட மத்திய அரசுக்கு மீண்டும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற