டிவி பார்க்கத் தடை... பெண் தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

டிவி பார்க்க வீட்டில் தடை விதித்ததால் கோபமடைந்த பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை நீஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மாரி. இவரது மகள் இந்திரா. 20 வயதாகும் இந்திரா, சரியான டிவிபைத்தியமாம். அவருக்கும், அவரது தம்பிக்கும் இடையே டிவி பார்ப்பதில் கடும் போட்டி நடக்குமாம்.

இந்திரா ஒரு சேனலை பார்த்தால் தம்பிக்கு வேறு சானல் பார்க்க வேண்டுமாம். இதனால் இருவரிடையேயும்அடிக்கடி சண்டை நடக்குமாம்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்திரா ஒரு சானலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தம்பிவேறு சானலை மாற்றுமாறு கூறினாராம். இந்திரா அதற்கு மறுத்துள்ளார். இதனால் இருவரும் கடுமையாக திட்டிக்கொண்டுள்ளனர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மாரி ஆத்திரமடைந்து, யாரும் டிவி பார்க்க வேண்டாம் என்று கூறி டிவியை ஆப்செய்துள்ளார். மேலும், இனிமேல் இருவரும் டிவியே பார்க்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறி விட்டார்.

இந்திராவை அப்போது கடுமையாக திட்டியுள்ளார் மாரி. இதனால் மனம் உடைந்த இந்திரா, மாரி வெளியேசென்ற சமயம் பார்த்து வீட்டிலிருந்து பூச்சி மருந்தைக் குடித்துவிட்டார்.

மயங்கி விழுந்த அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றிஇந்திரா இறந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற