For Quick Alerts
For Daily Alerts
சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்
சென்னை:
நெரிசலைத் தவிர்ப்பதற்காக சென்னை-நாகர்கோவில் நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை விட தென்னகரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன்படி, வரும் 29ம் தேதி இரவு 9.30 மணிக்கு சென்னையிலிருந்து இந்த சிறப்பு ரயில் கிளம்பும். மறுநாள் பகல்1.35 மணிக்கு இந்த ரயில் நாகர்கோவிலைச் சென்றடையும்.
அதேபோல், வரும் 30ம் தேதி மாலை 6.45 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து கிளம்பும் சிறப்பு ரயில், மறுநாள் காலை9.45 மணிக்கு சென்னையை வந்தடையும்.
தென்னக ரயில்வேயின் செய்திக் குறிப்பு ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!