இறால் ஏற்றுமதி பாதிப்பு... அரசுக்கு மீனவர் கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இறால் மீன் ஏற்றுமதி குறைந்துவிட்ட காரணத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தகுந்த நிவாரணம்அளிக்க வேண்டும் என்று மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால்போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.

இறால் மீன்களின் விலை அதிகமாக இருப்பதால், உள்ளூர் மக்கள் யாரும் அதிக அளவில் இறால் மீன்களைவாங்குவது கிடையாது. விலை அதிகமாக இருந்தாலும் அமெரிக்கர்கள் இறால் மீனை விருப்பத்துடன் வாங்கிவந்தனர்.

இதனால் அதிகமான அளவில் இறால் மீன்கள் அமெரிக்ாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தன. இதனால்மீனவர்கள் அதிக லாபமும் ஈட்டி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, இறால் மீன் ஏற்றுமதிமுற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இனி என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மீனவர் சங்கத்தினர் கூடி ராமேஸ்வரத்தில் விவாதித்தனர்.

அப்போது மீனவர்களின் துயர் போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் சென்னையில் கோட்டையை நோக்கிஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற