குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்க புதிய சட்டம்: அருண் ஜேட்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்.எல்.ஏவாக இருக்கும்போது ஊழல்குற்றம் புரிந்து தண்டனை பெற்றவர்களும் தேர்தலில் போட்டியிடத்தடைவிதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று மத்திய சட்ட அமைச்ர் அருண் ஜேட்லி கூறினார்.

ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்குமேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மக்கள்பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது. அதேபோல அவர்கள் அமைச்சராகப் பதவியேற்க முடியாது என்றும் அந்தச்சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.

இந்தச்சட்டப்பிரிவுகளின் அடிப்படையில்தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைஉச்சநீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்தது.

ஆனால் தண்டனை பெற்றவர் எம்.எல்.ஏவாகவோ, எம்.பியாகவோ இருந்தால், அவர்கள் தேர்தலில் போட்டியிடத்தடையில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டப்பிரிவு பற்றி பரிசீலனை செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்றுஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான பட்நாயக் கூறியிருந்தார்.

இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற இந்தியத் தொழில்வளர்ச்சிக் கழக விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தமத்திய சட்டஅமைச்சர் அருண்ஜெட்லியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர் பேசுகையில்:

தண்டனை பெற்றவர் எம்.எல்.ஏவாகவோ, எம்.பியாகவோ இருந்தால், அவர்களையும் தேர்தலில் போட்டியிடவிடாமல் தடைசெய்ய புதிய சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து அனைத்துக்கட்சிப் பிரமுகர்களுடன் கடந்த 13ம் தேதி நான் ஆலோசனை நடத்தினேன். பெரும்பாலானகட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதனால் கூட்டத்தின் முடிவில் ஒத்த கருத்து ஏற்படவில்லை.

நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடனேயே, குற்றம் சாட்டப்பட்டவர் தேர்தலில்போட்டியிடும் தகுதியை இழந்துவிடும் வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று தேர்தல் ஆணையம்கூறுகிறது.

இதுகுறித்து விரைவில் ஒரு முடிவெடுக்கப்பட்டு, புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறதுஎன்றார் ஜேட்லி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற