கண்ணி வெடியில் சிக்கி புலிகளின் தளபதி பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கண்ணி வெடியில் சிக்கி விடுதலைப்புலிகளின் தளபதி சங்கர் புதன்கிழமை பலியானார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணி தளபதியாக இருந்தவர் சங்கர். இவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிகவும் நெருக்கமானவர்.

நார்வே தூதர் எரிக் சோல்ஹெம்முடன் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, சங்கரும்உடனிருந்தார். இதன் பிறகே அவர் புலிகளின் முக்கியப் பிரமுகராகக் கருதப்பட்டார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பகுதியில் ஒட்டுசுடன் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார்சங்கர். அப்போது அவர் கண்ணி வெடியில் சிக்கி, உடல் சிதறி இறந்தார்.

இலங்கை ராணுவத்தின் ரகசிய கமாண்டோ படையினர்தான் இந்தக் கண்ணி வெடித் தாக்குதலை நடத்தினர் என்றுவிடுதலைப்புலிகள் குற்றம் சாட்டினர்.

ஆனால், இலங்கை ராணுவம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. சங்கர் இறப்புக்கும், தங்களுக்கும் எந்தவிதசம்பந்தமும் இல்லை என்று அது உறுதியாகக் கூறியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்குள் ஏற்பட்ட மோதல்தான் இதற்குக் காரணம் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற