அதிர்ச்சியில் மாரடைப்பு- புதுவையில் டிரைவர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பஸ் டிரைவர்மரணமடைந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணிக்கு சென்னை மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் மிதமான நிலஅதிர்வு ஏற்பட்டது.

இந்த அதிர்வில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. சில வீடுகளின் சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டன.

பாண்டிச்சேரியில் தேங்காய்த்திட்டு புதுநகரைச்சேர்ந்த பஸ் டிரைவர் ஏழுமலை என்பவர் செவ்வாய்க்கிழமை இரவுவீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால், அந்த அதிர்ச்சியில் அவருக்குமாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தன்நெஞ்சை பிடித்துக்கொண்டு தரையில் படுத்துவிட்டார். பிறகு அக்கம் பக்கத்தில்இருந்தவர்களும், அவரது மனைவி சாந்தியும் ஏழுமலையை அருகில் உள்ள மருத்துவமணைக்குஎடுத்துச்சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ஏழுமலைக்கு உயிர்பிரிந்தது.

ஏழுமலைக்கு லதா, முத்துலட்சுமி என்ற மகள்களும், முத்துக்குமார் என்ற மகனும் உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற