நிலநடுக்கம்... மக்களைக் காக்க போலீஸ் நடவடிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நில நடுக்கம் ஏற்பட்டால் மக்களை காக்க எல்லா நடவடிக்கைகளை எடுக்கவும் காவல்துறை தயாராக இருப்பதாகசென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக் கருப்பன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:

சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. மீண்டும் சென்னையில் நிலநடுக்கம்எடுக்கப்பட்டால் மக்களை காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க போலீசார் தயார் நிலையில்உள்ளனர்.

இதற்காக போலீஸ் இணை ஆணையர் சைலேந்திர பாபு தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டால் எந்த எந்தஇடங்கள் அதிகமாக பாதிக்கப்படும், அதாவது அதிகபட்ச ரிஸ்க் உள்ள பகுதி எது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் எந்த எந்த இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. அங்கு எவ்வாறு சென்றடைவது,மக்களை எவ்வாறு காப்பாற்றி வெளியேற்றுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு திட்டம்வகுக்கப்பட்டுள்ளது.

மாடிக்கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் அங்குள்ள இடிபாடுகளை எப்படி அகற்றுவது. அங்கு புல்டோசர்களைஎவ்வாறு விரைவாக கொண்டு செல்வது என்பது குறித்தும் ஆலோசனை செய்து திட்டம் தீட்டியுள்ளோம்.

நிலநடுக்கத்தால் மக்கள் காயமடைந்தால் அவர்களுக்கு முதலுதவி அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தயாராகஉள்ளன. ஆம்புலன்ஸ் உதவி தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் உடனே வந்து சேரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ரத்த வங்கிகளை தொடர்பு கொண்டு ரத்த இருப்பு நிலை குறித்தும், அவர்களிடம் எந்த வகைரத்த குரூப் கையிருப்பில் உள்ளது, எந்த வகை ரத்த குரூப் கிடைப்பதற்கு அரியது என்பது குறித்தும் தகவல்சேகரித்த வைத்துள்ளோம்.

மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டால் மக்களை திருமண மண்டபங்கள்,மைதானங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுசெய்துள்ளோம்.

நில நடுக்கம் ஏற்பட்டால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து விட வேண்டும். சென்னை நகரை நிலநடுக்கம்அதிகம் பாதிக்காது என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியுள்ளனர் எனவே மக்கள் அச்சம் கொள்ளவேண்டாம் என்று கூறினார் முத்துக்கருப்பன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற