தமாகாவுக்கு திருச்சி, 25 நகராட்சிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுகூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி மேயர்பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 25 நகராட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு இடங்கள் ஒதுக்குவதில் சிக்கல்நீடித்து வந்தது. இதையடுத்து தமாகா தலைவர் வாசன், ஜெயலலிதாவைச் சந்தித்துப்பேசினார். இதையடுத்து உடன்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியுடன் இடப் பங்கீடு தொடர்பான உடன்பாடுஎட்டப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சியும், 25 நகராட்சிகளும்தமாகாவுக்கு ஒதுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு நகராட்சிகள்ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற